Sunday, November 06, 2005

சிறுதுளி - ஒரு அறிமுகம்

சிறுதுளி - கோவை மாநகரைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து நடத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்.

இவ்வியக்கத்தின் குறிக்கோள் பின் வருவன.
  1. மழை நீர் சேமிப்பை ஊக்குவிப்பது.
  2. சுற்றுப்புற சூழல் மாசுபாட்டைக் குறைப்பது.
  3. கழிவு நீர் சுத்திகரிப்பை நெறிப்படுத்துவது.

கோவையைச் சுற்றியுள்ள கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதி குளம், செல்வசிந்தாமணி குளம், குறிச்சி குளம், குமாரசாமி குளம் ஆகியவற்றில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவுக்குத் தூர் வாறப்பட்டுள்ளது.

தற்பொழுது வாலாங்குளம் தூர் வாறப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவடையும்போது மேலும் 130 ஏக்கர் பரப்பளவுக்கு குளம் விரிவடையும்.

அடுத்து நொய்யல் ஆற்றை மீட்கும் பணியில் இறங்கத் திட்டமிட்டுள்ளது சிறுதுளி இயக்கம். மேலும், 15 லட்சம் மரங்களை நடுவதற்கும், திடக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு நான் கொடுத்திருப்பது ஒரு சிறு குறிப்பே.

மேலும் தகவலுக்கு: http://www.siruthuli.org/




அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.