Saturday, November 18, 2006

என் பெயர் போராட் சக்தயேவ்.



பதிவு ரேட்டிங் : R (US) / A (India)

யெக்ஸிமாஷ்..

என் பெயர் போராட் சக்தயேவ்(Borat Sagdayev). நான் கஸக்கஸ்தான் என்ற மத்தியஆசிய நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளன். என்நாட்டைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் ஆன என் பார்வை மிகப் பிரசித்தம். கஸக்கஸ்தான் நாடு அமெரிக்க நாளிதள்களில் அதிகாரபூர்வ மறுப்பு வெளியிட வேண்டியிருந்ததுன்னா பாத்துக்கங்களேன். போனவாரம் பெத்தராயுடு என்ன பாக்க வந்திருந்தாரு. என்னோட தொலைக்காட்சி தொடர ஏற்கனவே பாத்திருந்ததால என்னப்பத்தி அவருக்குத் தெரியும். சரி, இதில என்ன விசேசம்ன்னு கேக்கறீங்களா? என்னோட Borat: Cultural Learnings of America for Make Benefit Glorious Nation of Kazakhstan படந்தான் எல்லா ஊருலயும் திரையிட்டிருக்காங்களே? அதப்பாக்கத்தான் வந்திருந்தாரு. சரி படத்தப் பத்தி என்ன நெனச்சாருன்னு என்னயே சொல்லமாறு கூறிட்டாரு.


படத்தில கதைன்னு பெரிசா ஒன்னும் இல்ல. பத்திரிகையாளனான என்னை அமெரிக்க சென்று அந்நாட்டின் கலாச்சாரத்தை பற்றி ஒரு தொலைக்காட்சி டாகுமெண்டரி தயாரிச்சு வரும்படி அனுப்பி வைக்கும். அமெரிக்காவில் நான் அடிக்கும் லூட்டி(!) பற்றியதே இந்தப்படம். நியுயார்க் ஹோட்டலில் அறைக்கு செல்லும்போது லிஃப்டில் என்ன சின்ன ரூமா இருக்கேன்னு கேட்டதுல ஆரம்பிச்சு குளியலறையில் lavatory potல் முகம் கழுவதில் தொடர்ந்து ஆத்தங்கரையோரமா துணியை துவைத்துக் காயப்போடுவதில் முடிந்தது. பின்னர் தெருவில் ஒரு அழகிய பெண்ணின் போஸ்டரை பாத்து நான் செய்த செயல் வெளியில் சொல்ல முடியாதது. ஹோட்டல் அறையில் தொலைக்காட்சியில் பாத்து மனதைப் பறிகொடுத்த பெண்ணின் பெயர் Pamela Anderson என்று தெரிந்தது. மேலும் அவர் கலிபோர்னியாவில் இருப்பதும் தெரிந்தது. பமீலாவின் அழகில் மயங்கி உடனே அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. கொண்டு வந்த டாலரின் இருப்பு குறைந்து வரும் வேளையில், கூட வந்த தயாரிப்பாளரின் நச்சு தாங்க முடியாமல் வேலையைத் தொடர்ந்தோம்.


ஒரும் GM டீலரிடம் சென்று Hummer வாங்க வேண்டுமென்று விலை பேசிய பின்னர் எங்களிடமிருந்த $600 க்கு ஒரு செகண்ட்-ஹாண்ட் போஸ்டாபீஸ் வாகனத்தை விற்றார். பின் நாங்கள் அமெரிக்க க்ராஸ்-கண்ட்ரி பயணத்தைத் தொடங்கினோம். நடுவே கென்டகியிலோ அல்லது லூசியானாவிலோ ஆப்ரிக்க அமெரிக்கர்களுடனான பரிச்சயம். பின்னர், டெக்சாசில் rodeoவில் ஒரு அமெரிக்காவின் பெருமை பற்றி ஒரு பேச்சு. கடைசியில் என்னுடைய நக்கல் புரியாமலே கைதட்டினார்கள். இடையில் அமெரிக்க பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ள செய்யப்பட்ட விருந்தில் நான் செய்த செயலை பெத்தராயுடு ரசிக்கவில்லை. நடுவில் என்னுடன் வந்த தயாரிப்பாளர் என்னுடைய கூத்தை சகிக்க முடியாமல் சண்டை போட்டுவிட்டு என்னுடைய பாஸ்போர்ட், ரிடர்ன் டிக்கட் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கம்பி நீட்டிவிட்டார்.


இப்படியாக தொடர்ந்த என் அமெரிக்க பயணம் என்னவானது, பமீலாவைச் சந்தித்தேன என்பதே மீதித் திரைப்படம்.

சரி, அவ்ளோதான். வர்ட்டா..?

ச்சின்கூயி!