Wednesday, December 20, 2006

வெளிநாட்டில் மென்பொருள் பணிபுரிய வருவோர்க்கு சில குறிப்புகள்.

இங்கு நான் குறிப்பிடும் விடயங்கள் என்னுடைய சில ஆண்டு அனுபவத்தில் கற்றுக்கொண்டது அல்லது மற்ற இந்தியர்களிடம் கண்டது. இந்தியர்களின் வேலைத்திறன் பற்றி வெளிநாட்டினர் எள்ளளவும் சந்தேகம் கொள்வதில்லை. ஆனால் நம்மவரின் சுகாதாரம், உடைகள், பழக்க வழக்கங்கள் குறித்து மட்டமான அபிப்ராயம் அவர்களிடத்திலே உண்டு.

1. அலுவலகத்தில் வேலை செய்யுமிடத்தில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள். தவிர்க்க முடியாமல் தாய்மொழியில் பேச வேண்டியிருந்தால் அடுத்தவரை தொந்தரவு செய்யா வண்ணம் மெல்லிய குரலில் பேசுங்கள்.

2. பொதுவாகவே இந்தியர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கும் வியர்வை வீச்சத்தை வெளிநாட்டினர் யாரும் விரும்புவதில்லை. பணியிடத்துக்கு வரும்போது கட்டாயம் டியோடரண்ட் அணிந்து வாருங்கள். டியோடரண்ட் உபயோகிப்பது வியர்வை வாடையை கட்டுப்படுத்தவே. எனவே அதை உடைகள் மீது ஸ்ப்ரே அடிக்காதீர்கள்.

3. 'பட்டன் டவுன்' சட்டை அணிந்து இருந்தால் காலர் பட்டனைத் தவறாமல் போட்டுக்கொள்ளவும். இல்லாவிட்டால் பட்டன் டவுன் இல்லாத சட்டையாக தெரிவு செய்யுங்கள்.

4. முடிந்தவரை கால்சட்டைக்கு மேட்ச் ஆகும் சாக்ஸ் அணியுங்கள். அது இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு கருப்பு கலர் சாக்ஸ். கால்சட்டையும் சாக்ஸும் மேட்ச் ஆகவேண்டும். பெல்ட்டும் ஷூவும் மேட்ச் ஆகவேண்டும்.

5. காலை/மதிய உணவு உண்டபின் மவுத் பிஃரெஷ்னர் ஏதாவது இட்டுக் கொள்ளுங்கள்.

6. எந்த மீட்டிங் சென்றாலும் தேவை உள்ளதோ இல்லையோ, ஒரு நோட்பேட் மற்றும் பேனா எடுத்துச் செல்லுங்கள். இது நீங்கள் மீட்டிங்கை முக்கியமானதாக கருதுகிறீர்கள் என்ற எண்ணத்தை மற்றவரிடம் உருவாக்கும்.

7. இந்திய குடிமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமது நாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ளவேண்டும். நமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை மற்ற நாட்டினர் முன் போட்டுடைக்க வேண்டியதில்லை. நாம் அனைவரும் நம்நாட்டின் பிரதிநிதிகள் என்பதை எப்பொழுதும் மறக்கலாகாது.

8. லிப்டிலோ அல்லது கதவு அருகிலோ பெண்கள் வந்தால், கதவைத் திறந்து அவர்கள் முதலில் செல்ல வழிவிடுங்கள்.

9. எஸ்கலேட்டரில் செல்லும்போது பாதை முழுவதையும் அடைக்காமல் விரைந்து செல்பவர்களுக்கு ஏதுவாக ஒதுங்கி நில்லுங்கள்.

10. வெளிநாட்டினரை அழைக்கும் விருந்துகளை குறிப்பிட்ட நேரத்தில் துவக்குங்கள். நேரந்தவறாமையை இந்தியர்களுடனும் கடைபிடிக்க வலியுறுத்துங்கள்.




6 comments:

Kasi Arumugam said...

arumai.

pudugaithendral said...

வணக்கம்,

தாங்கள் கொடுத்திருக்கும் பாயிண்டுகள் மிகவும் அருமையான்வை.

அத்துடன், விமான நிலையத்தில், விமானத்தில், பொது இடங்களில் கூட எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருப்பவர்களை பார்க்கும் போது மனது வலிக்கிறது.

அதற்கும் ஒரு பதிவு போடுங்களேன்?

லதானந்த் said...

மிகவும் அருமையான டிப்ஸ்.

இது என் சிந்தனையைத் தூNdiடிவிட்டுப் புதுப் புதுப் பதிவேற்றங்களுக்கு ஆயத்தம் செய்துள்ளது.

கயல்விழி said...

மேலும் அதிக அளவில் இந்தியர்கள் செய்யும் முக்கியமான தவறு, அலுவலகத்தில் உட்கார்ந்துக்கொண்டு கத்தி கத்தி சொந்த விஷயங்களை செல் பேசியில் பேசுவது. இது அநாகரீகம் என்பதோடு மட்டும் அல்லாமல், மற்றவர் வேலை செய்ய முனையும் போது அவர்கள் வேலையையும் கெடுக்கும். ஒரு 5 நிமிடம் வெளியே போய் பேசிவிட்டு வரலாம்.

Sathiya said...

ரொம்ப சரியா சொன்னீங்க! ஆனா இதை எல்லாம் கடை பிடிப்பது தான நம்மவர்களுக்கு கஷ்டம்;)

இவன் said...

இதெல்லாம் நம்ம கலாச்சாரம் இதெல்லாம் விட்டுக்கொடுப்பாங்களா நம்ம மக்கள்??